1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வியாழன், 17 அக்டோபர் 2019 (12:35 IST)

கடைசியில் மோடியையும் விட்டு வைக்காத மீரா மிதுன் - என்னம்மா ஆச்சு உனக்கு?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் சேரன் மீது பழி சுமத்தியதால் மக்களால் வெறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறியவர்கள் அனைவரும் தங்களது கேரியர், புது வாழ்க்கை என கவனத்தை செலுத்தி வரும் நிலையில் மீரா மிதுன் மட்டும்  பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு சர்ச்சையான வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 


 
சமீபத்தில் சாக்க்ஷி , அபிராமி   தனது செல்போன் நம்பரை அவர்களது தனிப்பட்ட குழுக்களில் பகிர்ந்ததாகவும் இதனால் பல்வேறு நபர்களிடம் இருந்து தனக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் மீராமிதுன் குற்றம்சாட்டியிருந்தார். 
 
மேலும் ஜோ என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருப்பதாகவும். அவருக்கு ஆதரவாக இருந்து வரும் அபிராமியும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் மீரா கூறியிருந்தது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சேரன்  உண்மையான தைரியசாலி என்றால் என்னிடம் தனிப்பட்ட முறையில்,  நான் செய்தது தவறுதான் என்னை மன்னித்துவிடு மீரா என்று கேட்டிருப்பார். ஆனால் வீட்டிற்குள் மன்னிப்பு கேட்டு நல்லவர் போல் நடித்துவிட்டு வெளியில் புனிதமான நபர் போல் நாடகமாடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மீராவுக்கு ஆதரவாக சின்மயி பேசியதாக கூறி அவருக்கு நன்றி சொல்லியிருந்தார். 


 
இந்நிலையில்  தற்போது ருத்ரா என்ற பெண் எக்மோர் காவல் நிலையத்திலிருக்கும்  சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி மீராவுக்கு வாய்ஸ் நோட் அனுப்பியதாகவும் மீராமிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் எனக்கு அநீதி இழைத்த மொத்த சென்னை போலீசையும்  டிஸ்மிஸ் செய்ய வேண்டும், சட்டத்தை அமல்படுத்தும்போது காவல்துறை அந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து ஒரு வருடமாக தனக்கு அநீதி நடந்து வருவதோடு இன்னும் நான்  அந்த சித்திரவதைகளை அனுபவித்து வருகிறேன் என கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு டேக் செய்து ட்விட் தட்டியுள்ளார். 

இந்த போஸ்ட்டை கண்ட நெட்டிசன்ஸ்,   என்னம்மா பொசுக்குன்னு PM டேக் பண்ணிட்ட...CM கிட்டலாம் பேசமாட்டீங்களா  ஸ்ட்ரைட்டா PM  ஆஹ்? மீரா... என்ன ஆச்சு உனக்கு  என கமெண்ட்ஸ்  செய்து வருகின்றனர்.