"நம்ம வீட்டு பிள்ளை" படத்தையடுத்து மீண்டும் ஸ்கெட்ச் போட்டு தூக்கப்பட்ட மீரா மிதுன் !

Papiksha| Last Updated: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:26 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் 16 போட்டியாளர்களும் ஒருவராக நுழைந்தவர் மீரா மிதுன். இருக்கு அந்த வாய்ப்பே சர்ச்சையில் சிக்கி ஃபேமஸ் ஆனதால் தான் கிடைத்தது. ஆம்,  மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்ற அவர் அதை வைத்துக்கொண்டு அழகி போட்டி நடத்துவதாக கூறி பல மாடல் அழகிகளை ஏமாற்றி வந்தார். 


 
இதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த பட்டத்தை பறித்துக்கொண்டனர்.  அதன் பின்னர் மீரா மிதுன் செய்த பல கோல்மால் வேலைகள் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பாக பேசப்பட்டது. அந்த சமயத்தில் பிக்பாஸ் சீசன் 3க்காக விஜய் டிவி போட்டியாளர்களை தேர்வு செய்துகொண்டிருந்தனர். அப்போது மீரா மிதுனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்க உள்ளே சென்ற ஒரு சில நாட்களிலேயே சேரன் தன்னை தகாத இடத்தில் தொட்டதாக பொய் கூறி அசிங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 
 
நீக்கிவிட்டதாக கூறி இயக்குனர் பாண்டிராஜ் , சிவராத்திகேயன் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர் நிறுவனத்தை விளாசியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை அடுத்து தற்போது மீராமிதுன் நடிப்பதாக இருந்த அடுத்த படத்தில் இருந்தும் தற்போது அம்மணியை ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர். 


 
‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி மற்றும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மீரா மிதுன் கமிட் ஆகி இருந்தார்.  ஆனால், இந்த படத்தில் இருந்து மீரா மிதுனை எந்தவித முன் அறிவிப்பையுமின்றி திடீரென நீக்கியுள்ளனர். இதனால் மீரா மிதுன் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும், மீரா மிதுன் கதாபாத்திரத்தில் தற்போது கமலின் மகள் அக்ஷரா ஹாசன் கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :