வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (19:59 IST)

மீண்டும் ஹீரோயின் ஆகும் மீனா? யார் தெரியுமா ஹீரோ?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்ரமாக அறிமுகமாகி பின்னர் ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.
 
மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் என்பவரை 2009ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டார் . இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் தெறி திரைப்படத்தில் நடித்து கலக்கினார். 
 
இதனிடையே மீனாவின்  கணவருக்கு புறாவின் எச்சத்தால் ஏற்படும் சுவாசத் தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு இரண்டு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு, வேறு ஒருவரிடம் இருந்து பெறுவதாக மருத்துவமனை திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குத் தாமதம் ஆனதால், இப்படியே அவர் குணமாகலாம் என  நினைத்தனர். 
 
துரதிஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். இதையடுத்து மீனா மீண்டும் திரைப்படங்களில் நடிக ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் ராமராஜனுக்கு ஜோடியாக உத்தமன் என்ற படத்தில் மீனா நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.