வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 25 மே 2023 (14:28 IST)

அப்டேட் கேட்ட ரசிகர்கள்....'சலார்' பட இயக்குனர் பிரஷாந்த் நீல் எடுத்த திடீர் முடிவு

கே.ஜி.எப்.1-2 படங்களின் இயக்குனர் பிரஷாந்த் நீல் பிரமாண்டமான இயக்கி வரும் படம் சலார்.  கேஜிஎஃப்-2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து   நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

பிரபாஸுடன் இணைந்து இப்படத்தில் பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன்,ஜகபதிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ஹாம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்கிறார்.  உஜ்வல் குல்கர்னி எடிட் செய்கிறார்.

இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட் பற்றி ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதுபற்றி, இயக்குனர் பிரஷாந்த் நீலிடமும் ரசிகர்கள் கேட்டு வந்ததால், தன் சமூக வலைதள பக்கத்திலிருந்து  டி ஏக்டிவேட் செய்துவிட்டு வெளியேறியுள்ளார் அவர்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் ஆம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது.

அதேபோல், பிரபாஸ், சயீப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுரூஸ் படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.