1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 24 மே 2023 (14:39 IST)

கொரியன் மொழியில் ரீமேக் ஆகும் மோகன்லாலின் திரிஷ்யம்!

மோகன் லால் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

அதையடுத்து இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் திரிஷ்யம் திரைப்படம் சைனீஸ் மற்றும் ஹாலிவுட் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் உலக ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஜீத்து ஜோசப் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி திரிஷ்யம் திரைப்படம் விரைவில் கொரியன் மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிஷ்யம் படம் ஜப்பானிய படமான “தி சஸ்பெக்ட் எக்ஸ்”-ன் தழுவல் என முதலில் குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.