செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (09:53 IST)

"மாஸ்டர்" பட்ஜெட் இவ்ளோவ் தான் - ஆனால், லோகேஷ் கனகராஜ் சம்பளம் கேட்டால் ஆடி போயிடுவீங்க!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படத்தை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் பட்ஜெட் குறித்த ருசிகர தகவல் ஒன்று கிடைத்துள்ளது. பெரும்பாலும் விஜய் படங்கள் என்றாலே பல கோடிகளை கொட்டி கொடுக்க தயாரிப்பளர்களே முன்வருவார்கள். அப்படித்தான் விஜய்யின் முந்தைய படமான "பிகில்" 180 கோடி பட்ஜெட்டில் உருவானது. ஆனால், தற்போது மாஸ்டர் படத்திற்கு வெறும் 30 முதல் 40 கோடி இருந்தாலே போதும் என லோகேஷ் தயாரிப்பாளரிடம் கூறினாராம்.

அதற்கு முதலில் ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர் பின்னர் மீண்டும், பெரிய நடிகரை வைத்து படம் எடுக்கிறோம் இந்த படத்தின் பட்ஜெட்டை இன்னும் உயர்த்திக் கொள்ளலாம் என்று இயக்குனரரிடம் கூறினாராம். அதற்கு மறுப்பு தெரிவித்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்கு என்ன வேண்டுமோ அது மட்டும் இருந்தால் எனக்கு போதும் என்று தயாரிப்பாளரிடம் கூறியுள்ளாராம். இதையடுத்து லோகேஷிற்கு சம்பளம் 1.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதவிர நடிகர் விஜய் லோகேஷிற்கு சன்மானமாக ரூ.1 கோடி கொடுத்துள்ளார். இதில் நடிகர் விஜய்க்கு 80 கோடி சம்பளம் என்று வருமான வரித்துறை உறுதி செய்தது கூடுதல் தகவல்.