வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 13 மார்ச் 2020 (16:21 IST)

#VaathiStepuchallenge வைரலாகும் வாத்தி ஸ்டெப் - சாந்தனு , கீர்த்தியின் ஆட்டத்தை பாருங்க!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “மாஸ்டர்”. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்டு லுக், மற்றும் தர்டு லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அத்துடன் குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் என்ற முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி யூடியூபில் சாதனை படைத்து வருகிறது. தற்போது குட்டி ஸ்டோரி பாடல் 32 மில்லியன் பார்வையாளர்களையும், வாத்தி கம்மிங் பாடல் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்ப்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் நடனமாடும் அந்த ஸ்டெப் #VaathiStepuchallenge என கூறி ட்ரெண்ட் ஆகி வருகிறது. குழந்தைகள் முதல் யங்ஸ்டர்ஸ்  வரை விஜய் ரசிகர்கள் வாத்தி ஸ்டெப் போட்டு வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில்  வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்யின் மாணவராக நடித்துள்ள சாந்தனு தனது மனைவி கீர்த்தியுடன் வாத்தி ஸ்டெப் போட்ட வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ...