வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha
Last Updated : வியாழன், 12 மார்ச் 2020 (18:26 IST)

கோபக்கார பூனையுடன் விஜய்... தெலுங்கு "மாஸ்டர்" படத்தின் மேஜிக்கல் பர்ஸ்ட் லுக்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “மாஸ்டர்”. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடிக்கிறார்.  

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்டு லுக், மற்றும் தர்டு லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அத்துடன் குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் என்ற  முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் முதல் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதில் மேஜிக் எபெக்ட்டில் விஜய் கையில் பூனையுடன் நடந்து வருவது போன்றும், ஆழ்ந்த யோசனையில் தலையில் கைகோதி அமர்ந்திருப்பது போன்று பிளர் எபெக்டில் வெறித்தனமான போஸ்டர் வந்திறங்கியுள்ளது.