மாஸ்டர் செகண்ட் சிங்கிள் தயார் – பிரபல கிட்டார்ஸ்ட் தகவல் !
மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் விரைவில் ரிலீஸாக இருப்பதாக கிடாரிஸ்ட் கெபா ஜெரோமியா தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்போது அதன் பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆடியோ ரிலீஸ் எப்போது, டிரைலர் லான்ச் எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக இருக்க, இப்போது அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார் படத்தில் பணிபுரிந்து வரும் கிடாரிஸ்ட்டான கெபா ஜெரோமியா.
இவர் தனது சமூகவலைதள பக்கத்தில் ’அனிருத்துடன் ஒரு கூலாக பாடலில் பணிபுரிந்துவருகிறேன். இத்துடன் MASTERSECONDSINGLE என்ற வார்த்தையையும் சேர்த்து குறிப்பிட ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர். குட்டி ஸ்டோரி பாடலுக்கு பின்னர் நேராக ஆடியோ ரிலீஸ்தான் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக செகண்ட் சிங்கிள் பாடல் இந்த வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.
மாஸ்டர் படத்தின் இசை மற்றும் ஆடியோ வெளியீடு மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் நடக்கும் எனத் தெரிகிறது.