செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 ஜூலை 2020 (21:19 IST)

ஜேம்ஸ்பாண்ட் உடன் மோதுகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக திட்டமிடப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது
 
இந்த நிலையில் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் அதே தேதியில்தான் ஜேம்ஸ்பாண்ட் நடித்த திரைப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள ஈழத்தமிழர்கள் 'மாஸ்டர்' திரைப்படத்துக்கு ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தை விட அதிக திரையரங்குகள் வேண்டும் என தியேட்டர் அதிபர்களிடம் கேட்டதாகவும் அதற்கு திரையரங்கு உரிமையாளர்களும் ஒப்புக் கொண்டதாகவும் ஒரு சிலர் கதை கட்டி வருகின்றனர்
 
ஆனால் இது உண்மையில் ’கதை’ என்பது ஜெர்மனியில் உள்ள ஈழத்தமிழர்கள் தெரிவித்துள்ளனர். 'மாஸ்டர்' உட்பட தமிழ் திரைப்படங்கள் எந்த திரைப்படங்கள் வெளியானாலும் ஜெர்மனியில் நாளொன்றுக்கு ஒரு காட்சி மட்டுமே திரையிடப்படும் என்றும் ஆனால் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் தினமும் நான்கு காட்சிகள் திரையிடப்படும் என்று கூறி வருகின்றனர். 
 
மேலும் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தை விட அதிக திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் அப்படியே கிடைத்தாலும் தினமும் ஒரு காட்சிக்கு மட்டுமே 'மாஸ்டர்' திரைப்படம் அங்கு திரையிடப்படும் என்றும், எனவே ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்துடன் ஒப்பிட்டு 'மாஸ்டர்' திரைப்படத்தை பேசுவது வடிகட்டின முட்டாள் தனம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது