’மாஸ்டர்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

master
’மாஸ்டர்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
siva| Last Modified வியாழன், 14 ஜனவரி 2021 (11:56 IST)
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு ஒரு சில நெகட்டிவ் விமர்சனம் வந்தபோதிலும் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து ரசித்து கொண்டாடி வருகின்றனர்

அந்த வகையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 26 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 50% இருக்கைகள் அனுமதி இருந்தபோதிலும் இத்தனை வசூல் என்பது மிகப்பெரிய விஷயம் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நேற்று ஒரே நாளில் ஒன்பது கோடி வசூல் செய்திருப்பதாகவும் தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் இந்த படத்தின் வசூல் 35 கோடி என்றும் தகவல்கள் வந்துள்ளது

மேலும் உலக அளவில் இந்த படத்தின் வசூல் நேற்று ஒரே நாளில் ரூ.55 கோடி வசூல் செய்ததாக தெரிகிறது. உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பாதிப்பு இருந்தபோதிலும் ஒரே நாளில் 55 கோடி ரூபாய் மாஸ்டர் திரைப்படம் வசூல் செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :