அந்த கபடி தீம் மியூசிக்கை கொஞ்சம் கவனிக்கலாமே: அனிருத்திடம் கவின் வேண்டுகோள்

kavin
அந்த கபடி தீம் மியூசிக்கை கொஞ்சம் கவனிக்கலாமே
siva| Last Modified புதன், 13 ஜனவரி 2021 (21:05 IST)
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் ஒருசில காட்சிகள் மாஸாக இருப்பதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

குறிப்பாக விஜய் களத்தில் இறங்கி கபடி விளையாடுவது கில்லி படத்தை மீண்டும் ஞாபகப்படுத்துவது போன்று உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்

அதுமட்டுமின்றி கபடி விளையாட்டின் போது அனிருத் கம்போஸ் செய்த தீம் மியூசிக் தெறியாக இருப்பதாகவும் இந்த தீம் மியூசிக்கை அனைவரும் பாராட்டி வருகின்றனர் என்றும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கபடி தீம் மியூசிக்கை விரைவில் வெளிவர வெளியிட வேண்டும் என்றும் நடிகர் கவின், இசையமைப்பாளர் அனிருத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு வருடத்திற்கு பின்னர் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்த நடிகர் விஜய்க்கும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர்களுக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :