'மாஸ்டர்’ பட காட்சிகளை கசியவிட்டவர் கண்டுபிடிப்பு: புகாரளிக்க தயாரிப்பாளர் முடிவு!
தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் நேற்று திடீரென 'மாஸ்டர் படத்தின் ஒருசில காட்சிகள் இணையத்தில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்
தயாரிப்பாளர் பிரிட்டோ, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் டுவிட்டர் மூலம் இணையத்தில் பரவி வரும் காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் என்றும் அந்த காட்சிகள் எங்கிருந்து பகிரப்படுகிறது என்பது குறித்து தகவல் தெரிந்தால் உடனே தங்களுக்கு தெரிவிக்கவும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்
இந்த நிலையில் தற்போது 'மாஸ்டர் படத்தை இணையத்தில் கசிய விட்டவர் குறித்த தகவல் தெரியவந்ததாகவும் அந்த நபர் ஒரு தனியார் டிஜிட்டல் சினிமா நிறுவனத்தின் ஊழியர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது
இதனை அடுத்து அந்த தனியார் நிறுவன ஊழியர் மீது புகார் அளிக்க தயாரிப்பாளர் லலித் குமார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் புகார் அளிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் 'மாஸ்டர் படக்காட்சிகளை கசிய விட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது