செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (22:25 IST)

’’மாஸ்டர் படம் லீக்... புகார் செய்யுங்கள்…’’லோகேஷுக்கு அறிவுறுத்திய அனிருத் !

மாஸ்டர் படக்குழுக்குகே அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ஓபனிங் காட்சி உள்ளிட்ட சுமார் 1 மணிநேரம் ஓடக்கூடிய காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மாஸ்டர் பட இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் இயக்குநர் லோகேஷுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதில்,  இப்படம் 1000 பேரின் கடுமையான உழைப்பால் உருவாகியுள்ளது. இப்போது மாஸ்டர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதாவது வெளியாகியிருந்தால் உடனே blockxpiracy.com என்ற இணையதள முகவரிக்கு புகார் தெரிவியுங்கள் உடனடியாக எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அனுஷ்கா ஷெட்டியின் ரசிகர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.