1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (21:43 IST)

’ஈஸ்வரன்’ ரிலீசில் திடீர் சிக்கல்: ஓடிடிக்கு செல்கிறதா?

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் பொங்கல் தினத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதால் ஈஸ்வரன் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி மாஸ்டர் திரைப்படத்தை வாங்கவே பல திரையரங்கு உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தை திரையரங்குகளில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது மாஸ்டர் திரைப்படத்தை தான் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஒரு வாரம் கழித்து வேண்டுமானால் ஈஸ்வரன் திரைப் படத்தை வெளியிடலாம் என்றும் அவர்கள் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது

மேலும் ஒடிடியில் ஈஸ்வரனை, இந்தியாவுக்கு வெளியே வெளியிடுவதால் தமிழகத்தில் பொங்கலுக்கு தியேட்டர்களில் ஈஸ்வரன் படத்தை வெளியிட மாட்டோம். தியேட்டர் அதிபர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஈஸ்வரன் திரைப்படக் குழு ஓடிடியில் பேச்சுவார்த்தை நடத்தத் பட்டு வருவதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது