ஞாயிறு, 25 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (18:50 IST)

லியோ படத்தின் விஜய் ஓப்பனிங் காட்சியைப் பார்த்து பதிவிட்ட பிரபல நடிகர்!

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ஆரம்பக் காட்சியைத் தன்னை இயக்குனர் லோகேஷ் பார்க்க வைத்ததாக பிரபல நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கூறியுள்ளார்.

அவரது பதிவில் “இயக்குனர் லோகேஷ் என்னிடம் லியோ படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியைக் காட்டினார். மாஸ்டர் படத்தின் அறிமுகக் காட்சியை விட 10 மடங்கு சிறப்பாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.