வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (08:53 IST)

சமந்தா விஜய் தேவரகொண்டாவின் குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லைகர் படத்துக்குப் பின்னர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக குஷி திரைப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தமிழ்நாட்டில் இந்த படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்றது.

இந்நிலையில் படத்தின் வெற்றி காரணமாக தன்னுடைய சம்பளத்தில் இருந்து 100 ரசிகர்களின் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் உதவியாக வழங்கப்படும் என விஜய் தேவரகொண்டா அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது குஷி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் என சொல்லப்படுகிறது.