மாஸ்டர் படத்தில் 20 காட்சிகளுக்கு கட் – வெளியான சென்சார் தகவல்கள்!

Last Modified புதன், 6 ஜனவரி 2021 (16:57 IST)

மாஸ்டர் படத்தில் மொத்தமாக 20 காட்சிகளுக்கு சென்சார் துறையினர் கட் செய்ய ஆலோசனைக் கொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அமர வேண்டும் என அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாகும் நிலையில் 100% பார்வையாளர்களை அனுமதித்து தமிழக அரசு. ஆனால் இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தை சமீபத்தில்தான் சென்சார் அதிகாரிகள் பார்த்து UA சான்றிதழ் அளித்தனர். இந்நிலையில் இப்போது இந்த படத்தில் ஆடியோ முயூட் செய்தல், காட்சிகளை வெட்டுதல் மற்றும் ப்ளர் செய்தல் ஆகிய வடிவங்களில் மொத்தமாக 20 காட்சிகளை சென்சார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :