கொரோனா தடுப்பூசி கொடுங்க: இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை!
கடந்த பல மாதங்களாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப் படைத்து வந்த கொரோனா வைரஸ்ஸை கட்டுப்படுத்த சமீபத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது இந்த தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவில் பழக்கத்திற்கு வர உள்ளது என்பதும் அனைத்து மக்களுக்கும் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தடுப்பூசியை கண்டுபிடித்த சீரம் என்ற நிறுவனம் இந்தியாவுக்கு மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் சப்ளை செய்ய முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்தியாவிடம் தடுப்பூசி கேட்டு இலங்கை அரசு அதிகாரபூர்வமாக கோரிக்கை வைத்துள்ளது
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் சமீபத்தில் இலங்கை சென்று அந்நாட்டுத் தலைவர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு வழங்க இந்தியாவிடம் அந்நாடு அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது
மேலும் அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இலங்கை அரசு கைது செய்து சிறையில் வைத்துள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இலங்கை பயணத்தின் போது அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டவர்களை சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது