1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (20:15 IST)

’மாஸ்டர்’ ஆடியோ விழா: ரசிகர்களுக்காக விஜய் செய்ய இருக்கும் சிறப்பு ஏற்பாடு

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த விழாவிற்கு படக்குழுவினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும் ரசிகர்களுக்கு அனுமதி இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இடவசதி மற்றும் பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
 
இருப்பினும் விஜய் தனது ரசிகர்களை ஏமாற்றாத வகையில் இந்த படத்தின் ஆடியோ விழாவை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி சென்னையின் முக்கிய திரையரங்குகளில் இந்த விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இதனால் விழா நடக்கும் இடத்திற்கு ரசிகர்கள் வந்து ஏமாந்து செல்ல தேவையில்லை என்றும் நேரடியாக திரையரங்குகளில் இருந்தே இந்த ஆடியோ விழாவை ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம் என்றும் கூறப்படுகிறது இருப்பினும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்