தளபதி 65 பட்டியலில் இருந்து திடீரென வெளியேறிய சுதா கொங்கரா: அதிர்ச்சி தகவல்
தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 65’ திரைப்படத்தை சுதா கொங்கரா தான் இயக்கவிருக்கிறார் என 90 சதவிகித செய்திகள் உறுதி செய்தன. சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் நாயகியையும் சுதா தேர்வு செய்து விட்டதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் திடீரென ’தளபதி 65 ’படத்தை சுதா கொங்காரா இயக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. சுதா கொங்காரா கூறிய ஒன்லைன் கதை விஜய்க்கு பிடித்து விட்டதாகவும் ஆனால் முழு கதையையும் அவர் கேட்ட பின்னர் இந்த கதையை தனக்கு சரியாக வராது என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது. மேலும் சுதா கொங்காரா விதித்த நிபந்தனைகளில் விஜய்க்கு உடன்பாடில்லை என்று கூறப்படுகிறது
எனவே ‘தளபதி 65’ பட்டியலிலிருந்து சுதா கொங்கரா வெளியேற்றப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தை ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சர்கார் போன்ற ஒரு அதிரடி அரசியல் படம்தான் விஜய்யின் அடுத்த படமான ’தளபதி 65 என்றும்’ கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வர வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன