1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (08:34 IST)

கொரோனா இந்தியாவில் பரவிவிட்டது… வாழ்த்துகள் – நடிகைக்கு சமூகவலைதளங்களில் கண்டனம் !

சார்மி

நடிகை சார்மி கொரோனா இந்தியாவுக்கு பரவியது தொடர்பாக தெரிவித்த சர்ச்சையான கருத்தால் இப்போது கண்டனங்களை எதிர்கொண்டுள்ளார்.

சீனாவில் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகமெங்கும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை சீனாவில் மட்டும் 3000 பேர் வரை இந்த நோய்த்தாக்குதலால் இறந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் அந்த வைரஸ் தாக்கம் சிலரிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கொரோனா இந்தியாவில் பரவி விட்டது…. வாழ்த்துகள்’ எனத் தெரிவித்திருந்தார். இதற்கி நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

நடிகை சார்மி தமிழில் 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் நடிப்பில் இருந்து விலகி இப்போது விஜய் தேவாரகொண்டா நடிக்கும் பைட்டர் எனும் படத்தில் நடித்து வருகிறார்.