வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 22 ஜூன் 2019 (15:14 IST)

தளபதி பிறந்தநாளுக்கு "பிகில்" தயாரிப்பாளர் வெளியிட்ட மாஸ் வீடியோ!

தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கூறி வருவதோடு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். 
 

 
இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தளபதி 63 படத்தின்  ஃப்ர்ஸ்ட் லுக் , செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களை திருப்தி படுத்தினர் படக்குழுவினர். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் தளபதியின் பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்கள் ரசிகர்கள். 
 
மைக்கேல் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சி அணிந்தபடி நிற்கும் கால்பந்தாட்ட வீரரான மகன் விஜய் தோற்றமளித்தார். அப்பா விஜய்,  கையில் கத்தி, கழுத்தில் சிலுவை, நெற்றியில் திருநீறு, குங்குமம் என ரெளத்ரமாக நிற்கும் வகையில்  இரண்டாவது போஸ்டர் வெளிவந்தது. அப்பா விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் ராயப்பன் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்தது.
 
விஜய் பிறந்த நாளில் இந்த இரண்டு போஸ்டர்களை சமோகவலைகளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது கூடுதல் கொண்டாட்டமாக பிகில் திரைப்படகின் தரைப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி ஒரு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.