தமிழ் சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அக்கிரமங்கள்! விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

Last Updated: சனி, 22 ஜூன் 2019 (14:26 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பபட்டு வருகிறது. 


 
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கிய இந்த சீரியலில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் முல்லை ரோலில் நடிக்கும் சித்ரா. இந்த சீரியல் மூலம் சித்ரா இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளார்.
 
இந்நிலையில் சமீபத்தில் வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் சீரியல்களில் நடக்கும் அவலங்களை கூறியுள்ளார். அதாவது ,  " தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் கேரளா, கர்நாடகா என வேறு மாநில பெண்களுக்கு வாய்ப்பு கோபித்து கொடுக்கிறார்கள். காரணம் வெள்ளையாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே இது பல திறமைவாய்ந்த கலைஞர்களை மனரீதியாக பாதிக்கிறது என்று கூறிய அவர், 
 
"நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர்தான். ஆனா, இதுவும் அழகுதானே?! நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறாங்கனு தெரியல." என்று ஆக்ரோஷத்துடன் சித்ரா பேட்டியில் தெரிவித்துளளார்.


இதில் மேலும் படிக்கவும் :