விஜய் பிறந்த நாளில் சூப்பர் ட்ரெண்டாகும் "#என்றும்தலஅஜித்" ஹேஷ்டேக்’!

Last Updated: சனி, 22 ஜூன் 2019 (14:03 IST)
தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக பார்க்கப்படும் நடிகர்கள் தல அஜித்,  தளபதி விஜய். தமிழ் நாட்டில் சினிமாவை விரும்புபவர்களின் பட்டியலை இரண்டாக பிரிக்கலாம்.  அதில் ஒரு பாதி அஜித் ரசிகர்களும் மறுபாதி விஜய் ரசிகர்களும் மட்டுமே இருப்பார்கள். ஆனால் அதில் யார் டாப் என்பது தான் ஹைலைட். அதற்காகத்தான் போட்டிபோட்டு சமூக வலைத்தளங்களில் போரிடுவார்கள். 
 


 
இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தளபதி 63 படத்தின்  ஃப்ர்ஸ்ட் லுக் , செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களை திருப்தி படுத்தினர் படக்குழுவினர். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் தளபதியின் பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்கள் ரசிகர்கள். 
 
ஆனால், இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா அஜித் ரசிகர்கள் ? தளபதிக்கு ஏற்றாற்போல்  தலயை கொண்டாடவேண்டும் என கருதி  "#என்றும்தலஅஜித்" என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள். 


 
தங்கள் சினிமா தொழிலையும் தாண்டி அஜித் - விஜய் இருவரும் நல்ல நண்பர்களாக நட்பு பாராட்டி வரும் நிலையில், அவரது ரசிகர்களிடையே இன்னும் ஒருவிதமான போட்டி மனப்பான்மை போன்றவை காலம்காலமாக இருந்து வருவதோடு ட்விட்டர் போரும் நடந்துவருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :