மீனவர் இப்படிதான் செய்வாரா ? – பிகில் பட போஸ்டரால் புதிய சர்ச்சை !

Last Updated: சனி, 22 ஜூன் 2019 (12:30 IST)
நேற்று மாலை வெளியான பிகில் பட போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வரும் வேளையில் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

விஜய் அட்லி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகி வரும் படத்தின் தலைப்பு ’பிகில்’  எனப் படக்குழுவினரால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். போஸ்டர் வெளியானது முதல் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இந்த போஸ்டர் குறித்தும் விஜய்யின் பிறந்தநாள் குறித்தும் ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

வரவேற்புகளையும் பாராட்டுகளையும் குவித்துவரும் போஸ்டர் விமர்சனங்களையும் சந்திக்காமல் இல்லை. தேவர் மகன் போஸ்டரின் காப்பி என்று சில விமர்சனங்கள் எழுந்துள்ள வேளையில் முக்கியமான மற்றொரு விமர்சனமும் எழுந்துள்ளது. போஸ்டரில் வயதான மீனவக் கதாபாத்திரத்தில் இருக்கும் விஜய் ’மீனவர்கள் மீனை வெட்டும் மரமேடை மீது செருப்புப் போட்டிருக்கும் காலை வைத்து திமிராக அமர்ந்திருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு மீனவரும் இதுபோல செய்யமாட்டார் என சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த சாதாரணமான விஷயம் கூட தெரியாமல் வெறுமனே மாஸாக இருக்க வேண்டும் என்பதற்காக போஸ்டர் உருவாக்குவது கேவலமான விஷயம் எனக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.இதில் மேலும் படிக்கவும் :