திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (19:39 IST)

தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய குவியும் படங்கள்: விஜய்க்கு எதிரான சதியா?

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தை தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் இந்த படத்தின் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் அனைத்து விநியோகஸ்தர்களிடம் இந்தப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விருந்தாக வெளிவரும் என்றே கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் அதே தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அந்த படத்தின் குழுவினர்களிடமிருந்தும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி சற்று முன்னர் சசிகுமார் நடித்து வரும் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற திரைப்படமும் தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்நிலையில் விஷாலின் ’சக்ரா’ திரைப்படமும் தமிழ் புத்தாண்டை குறி வைத்துள்ளதாகவும் கோலிவுட்டில் செய்திகள் பரவி வருகிறது. பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் சோலோவாக ரிலீசாகி பெரும் வசூலை வாரிக் குவித்தது போல் விஜய்யின் மாஸ்டர் படமும் தமிழ் புத்தாண்டு தினத்தில் சோலோவாக ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய படங்கள் குவிந்து வருவது விஜய்க்கு எதிரான சதியாகவே பார்க்கப்படுகிறது