செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 23 ஜனவரி 2020 (15:34 IST)

பிரபல ஹீரோவுடன் நடிக்க மறுத்த கேத்ரின் தெரசா...

கார்த்தி நடித்த மெட்ராஸ் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கேத்ரின் தெரசா. இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய தேவரகொண்டாவுடன் இவர் நடித்த 'வேர்ல்ட் பேமஸ் லவ்வர்' என்ற படம் அடுத்த மாதம் காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14 ஆம் தேதி ) ரிலீஸ் ஆக உள்ளது.
இதற்கிடையில், தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கேத்ரின் தெரசாவை படக்குழுவினர் அணுகினர்.
 
அதற்கு, கேத்ரின் தெசரா, வயதான நடிகருடன் நடிக்க மாட்டேன் என அவர் தெரிவித்ததாகத் தெரிகிறது.
மேலும், பால கிருஷ்ணாவின் படத்திற்கு கேத்ரின் தெசராவை அணுகுவதற்கு முன் ஹிந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவை அவருக்கு படத்தில் ஜோடியாக்க நினைத்துள்ளனர். அவரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.