வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (08:02 IST)

விஷாலின் மார்க் ஆண்டனி படத்துக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ள பிரபல நடிகர்!

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. செப்டமபர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஆரம்பத்தில் கதையை விவரிக்கும் ஒரு குரல் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. அந்த குரலுக்கு நடிகர் கார்த்தி வாய்ஸ் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.