1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஜூலை 2023 (17:43 IST)

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ.10,000: தமிழக அரசின் அரசாணை..!

Accident
விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ.10,000 வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் போலீஸ் கேஸ் என பிரச்சனை வரும் என்று பலர் ஒதுங்கி விடுவதுண்டு. ஆனால் விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுபவர்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் வராது என்று ஏற்கனவே தமிழக அரசு உறுதிமொழி கொடுத்துள்ளது.
 
இந்த நிலையில் விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு உதவுபவரை ஊக்குவிக்கும் வகையில் இந்த தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசால் அளிக்கப்பட்ட ரூபாய் 5000 தொகையுடன் மாநில அரசின் பங்குகளை கூடுதலாக ரூபாய் 5000 வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
Edited by Siva