திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (19:45 IST)

''விஜய்67 ''படத்தில் இணைந்த மன்சூர் அலிகான், மிஸ்கின்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வாரிசு. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கவுள்ள படம் விஜய்67.

இப்படத்தைல் லலித் மற்றும் ஜகதீஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்று இப்படத்தில் பிரியா ஆனந்த் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனக்ராஜின் பேவரை நடிகர் மன்சூர் அலிகான், மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகிய இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மன்சூர் அலிகான்,'யானும் இணைந்தேன் தளபதி67 -ல். லோகேஷ் நீ ஆர்பரித்தெழு. திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே' என்று தெரிவித்துள்ளார்.