ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (16:10 IST)

விமான நிலையத்தில் சோதனை வரிசையில் விஜய்! வைரலாகும் வீடியோ

vijay
.

விஜய்  நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வாரிசு.இப்படத்தை வம்சி இயக்கினார், தமன் இசையமைத்திருந்தார்.  தெலுங்கு தயாரிப்பாளர்  தில்ராஜு தயாரித்துள்ளார்.

உலகம் முழுக்க உள்ள தியேட்டர்களில் வாரிசு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்.  இப்படம் வெளியான 11   நாட்களில் உலகம் முழுவதும் ரூ.250  கோடி வசூல் குவித்துள்ளதாக  தில்ராஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

இவ்விழாவில், பாடலாசிரியர் விவேக், தயாரிப்பாளர் தில்ராஜு. இயக்குனர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் வாரிசு பட வெற்றி விழா முடிந்து, நடிகர் விஜய், பாதுகாவலர்கள் இன்றி ஐதராபாத் விமான நிலையத்தில் நடந்து சென்றார். சக பயணிகளைப் போன்று அவரும் முகக்கசவம்ம் அணிந்தபடி,  சோதனை வரிசையில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.