வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2022 (19:34 IST)

''விஜய்67'' படத்தில் கே.ஜி.எஃப் பட நடிகரின் சம்பளம் இத்தனை கோடியா?

விஜய்67#Thalapathy67 படத்தைப் பற்றிய முக்கிய தகவல் இன்று வெளியாகியுள்ளது.
 
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 
#Thalapathy67   வது திரைப்படத்தின் வேலைகளை இயக்குனர் லோகேஷ்  சில நாட்களுக்கு முன் ஆரம்பித்தார்.

இப்படத்திற்கு நடிகர்,  நடிகைகளை லோகேஷ் தேர்வு செய்து வந்த லோகேஷ்,சமீபத்தில், ஐதராபாத் சென்று இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அவ்வப்போது, இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவல்களை அவர்களே தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படம் எந்த மாதிரி உருவாகவுள்ளது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், கைதி படம் போலவே இப்படத்தில் பாடல்கள் இல்லை என்றும் அதிரடி ஆக்சன் படமாக இது இருக்கும் எனவும், தீம் பாடல் மட்டும்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.


இந்த நிலையில், விஜய்யின் மாறுபட்ட கதைக்களமாகவும் ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாகவும் ''விஜய்67''#Thalapathy67 இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இப்படத்தில் நடிக்கும் 6 வில்லன்களில் ஒருவரான பாலிவுட் முன்னாள் சூப்பர் ஸ்டார் ரஞ்சய் சத்( கேஜிஎப்-ல் நடித்தவர்) இப்படத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


மேலும், இப்படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ100 கோடிக்கு மேல் என கூறப்படும் நிலையில்  இது உறுதிப்படுத்தப்படவில்லை.