1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (17:45 IST)

ரஜினி 168 படத்தில் மலையாள லேடி சூப்பர் ஸ்டார்....? அவரே சொன்ன சூப்பர் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 168' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
 
இதற்கிடையில் அண்மையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
 
அதாவது இப்படத்தில் பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியார் நடிக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று வைரலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்தில் தான் பங்கேற்ற விழா ஒன்றில் பேசிய மஞ்சு வாரியார்... ரஜனி 168 படத்தில் நடிக்க இதுவரை எனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை எனவே இது முற்றிலும் வதந்தி என கூறி உறுதி செய்தார்.