வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (19:15 IST)

துக்ளக் தர்பாரில் விஜய்சேதுபதியுடன் இணைந்த கேரளத்து அழகி!

சிந்துபாத் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தனது அடுத்த அத்தியாயத்தை துவங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் தில்லி பிரசாத் இயக்கத்தில் அரசியல் த்ரில் கதைக்களத்தில் உருவாகும் 'துக்ளக் தர்பார்' படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. 


 
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹெய்தாரி நடிக்கும் இப்படத்தை 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. நானும் ரவுடி தான் படத்தில் நடித்தவர்களை தேடி பிடித்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும்  தனித்தனியாக பேசவைக்கும் விதத்தில் இயக்குனர் தில்லி பிரசாத் புதிய பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.  அந்தவகையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் பார்த்திபன் நடிக்கவுள்ளார். மேலும் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதும் இப்படத்திற்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். 


 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலென்னெவென்றால்  இப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல இளம் மலையாள நடிகை மஞ்சிமா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போது தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.  விஜய்சேதுபதியுடன் முதன்முறையாக இணையவுள்ள இப்படத்தின் மஞ்சிமா மோகனின் கதாபாத்திரம் என்ன எனது குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் காத்திருக்கின்றனர்.