தடபுடலான வரவேற்புடன் "துக்ளக் தர்பார்" படப்பூஜை - வருத்தப்பட்ட விஜய்சேதுபதி!

Last Updated: சனி, 3 ஆகஸ்ட் 2019 (17:20 IST)
சிந்துபாத் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தனது அடுத்த அத்தியாயத்தை துவங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் தில்லி பிரசாத் இயக்கத்தில் உருவாகும் 'துக்ளக் தர்பார்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹெய்தாரி   நடிக்கிறார். 


 
நானும் ரவுடி தான் படத்தில் நடித்தவர்களை தேடி பிடித்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும்  தனித்தனியாக பேசவைக்கும் விதத்தில் இயக்குனர் தில்லி பிரசாத் புதிய பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.  பாலாஜி தரணிதரன் வசனம் எழுதும் இப்படத்திற்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். 
 
இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில்  விஜய்சேதுபதி, அதிதிராவ் ஹெய்தாரி, பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, இயக்குநர்கள் பிரேம்குமார், பாலாஜி தரணிதரன், தியாகராஜ குமாரராஜா, அஜய் ஞானமுத்து, பிரபாகரன், மருதுபாண்டி, ஆண்ட்ரு ஆகியோர் கலந்து கொண்டு கிளாப் போர்டு அடித்து துவக்கி வைத்தனர். .
 
இப்படத்தின் பூஜைக்காக விஜய் சேதுபதி வரும்போது பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதனை கண்டு அதிருப்தி அடைந்த விஜய்சேதுபதி , "இந்த விழாவுக்கு நான் வரும் போது, யாரு பட்டாசு வெடிக்கணும் என்று ஐடியா கொடுத்தாங்களோ அவர்கள் மீது மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :