திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (07:28 IST)

தஞ்சையில் நான் காலெடுத்து வைக்க மாட்டேன்: ‘பொன்னியின் செல்வன்’ டிரைலர்

ponniyin selvan
தஞ்சையில் நான் காலெடுத்து வைக்க மாட்டேன்: ‘பொன்னியின் செல்வன்’ டிரைலர்
மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த படத்தின் டிரைலர் 2 நிமிடங்களுக்கு மேல் உள்ளது என்பதும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் அதில் இணைக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக நந்தினி மற்றும் ஆதித்த கரிகாலன் சந்திக்கும் காட்சியின்போது தஞ்சையில் நான் காலெடுத்து வைக்க மாட்டேன் என ஆதித்த கரிகாலன் கூறும் காட்சி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த படத்தின் டிரைலரை அடுத்து இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் அனைத்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லரின் ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று இரவு வெளியான இந்த ட்ரெய்லர் 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.