திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (21:24 IST)

பொன்னியின் செல்வன் -1 பட இசை வெளியீட்டு விழா: பிரபல நடிகர்கள் வருகை!

ponniyin selvan
பொன்னியின் செல்வன் -1 படத்தில் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா தற்போது தொடங்கியுள்ளது.
 

மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டீசர் வெளியீட்டில் கலந்துகொள்ளாத நடிகர்  விக்ரம் . இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார். மேலும்,  ஐஸ்வர்யாராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், சிறப்பு அழைப்பாளர்களான ரஜினி, கமல்  உள்ளிட்ட நட்சத்திரங்கள்  இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சிறிது நேரத்தில் தமிழக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள, பொன்னியின் செல்வன்-1 பட இசை மற்றும் டிரெயிலர் வெளியாகவுள்ளது.