1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Ilaiyaraaja talked about emotional bonding with coimbatore

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

Ilaiyaraajaa
உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் விரைவில் அவரது  சிம்ஃபொனி இசைக் கச்சேரி தமிழ அரசு ஏற்பாட்டில் சென்னையில் அரங்கேற உள்ளது. அதற்கு  முன்பாக அவர் கோயம்புத்தூரில் இசைக் கச்சேரி ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “கோவையில் என் கால் படாத இடமே கிடையாது. எல்லா தெருக்களிலும் நான் நடந்து சென்றுள்ளேன். நான் இப்போது வரை இசையமைத்துக் கொண்டிருக்கும் ஹார்மோனியம் கோயம்புத்தூரில் செய்யப்பட்டதுதான். இந்த ஊரையும் என்னையும் பிரிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!