1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated: சனி, 1 ஏப்ரல் 2023 (17:46 IST)

நான் கர்ப்பமாக இருக்கிறேன்? ஒரு வழியா உண்மை உடைத்த மணிமகேலை!

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். 
 
கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
திருமணத்திற்கு பின்னர் விஜய் டிவியில் பிசியாக இருந்து வந்தார். இதனிடையே சொந்தமாக யூடியூப் சேனல் துவங்கி வருமானம் சொகுசு கார், பங்களா, நிலம் என வளர்ந்துவிட்டார். 
 
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு காரணம் மணிமகேலை கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. 
 
அது குறித்து, லைவ் சாட்டில் பதிலளித்த அவர்,  நோ, அதெல்லாம் வதந்தி. நான் கர்ப்பமாக இல்லை. எந்த செய்தியாக இருந்தாலும் ஒரு 4 யூடியூப் சேனல்கள் சொல்லி தான் உங்களுக்கு தெரியுற மாதிரி இருக்காது. 
 
 நானே சொல்லுவேன் என்று பதிலளித்தார். அத்துடன், நான் இன்னும் விஜய் டிவியில் தான் இருக்கிறேன், ஏப்ரல் மாதத்தில் சிறப்பு பட்டிமன்றத்தில் என்னை அடுத்து பார்க்கலாம் என்று மணிமேகலை தெரிவித்துள்ளார்.