வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (10:46 IST)

அடித்து, எச்சில் துப்பி துன்புறுதியதாக பார்வதி நாயர் வீட்டில் வேலை செய்தவர் குற்றச்சாட்டு!

தமிழ் மலையாள திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை பார்வதி நாயர். இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நிலையில் அவரது வீட்டில் ரூபாய் 6 லட்சம் ரூபாய் மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த கை கடிகாரங்கள் திருடப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.  அவர் வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் திருடி சென்று விட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ள சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ், தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் “பார்வதி நாயர் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய மது விருந்தை நான் பார்த்துவிட்டேன். அதை நான் வெளியில் சொல்லிவிடுவேன் என்ற பயத்தில் என்னை அநாகரிகமாக நடத்தி, அடித்து துன்புறுத்தி என் மீது எச்சில் துப்பி அவமானப் படுத்தினார். மேலும் என் மீது அபாண்டமாக திருட்டுப் பட்டத்தையும் சுமத்துகிறார்” எனக் கூறியுள்ளார்.