1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (16:56 IST)

மீண்டும் அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல நடிகை… விக்னேஷ் சிவன் படத்தில் நயன்தாரா இல்லையாம்!

அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் முடிவதற்கு முன்பாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே த்ரிஷா அஜித்துடன் கிரீடம்,  என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷா தளபதி 67 படத்தில் விஜய்யுடனும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.