செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified புதன், 9 நவம்பர் 2022 (18:01 IST)

FIFA-2022: உலகக் கோப்பை தொடக்கவிழாவில் பிரபல பாடகியின் கலைநிகழ்ச்சி!

Shakira Colombian singer
22 வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பாப் பாடகி ஷகிரா, பாலிவுட் பாடகி ஆகியோர் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

32 அணிகள் பங்கேற்கும் 22 வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு  நவம்பரில் தொடங்கவுள்ளது.

வரும்   நவம்பர் 21 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடக்கவுள்ளது.

இப்போட்டியில் சுமார் 32  அணிகள் பங்கேற்கவுள்ளது. இதில், கடைசி தகுதிசுற்று ஆட்டங்கள் மூலம் இதுவரை 30 அணிகள் போட்டிகுதகுதி பெற்ற நிலையில்,   கடைசி அணியாக கோஸ்டாரிகா தகுதி பெற்றது.

இந்த நிலையில்,  4 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, லீக் போடிகள் முதலில் நடைபெற்ம், இதில், சிறப்பாக வெற்றி பெரும் அணிகள் ரவுண்ட்16 சுற்றுக்கு செல்லும்.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உலகக் கோப்பை தொடக்க விழா நடக்கு 20 ஆம் தேதி அல்கோர் அ –பைத் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளதால், இதில், கொலம்பிய பாப் பாடகி ஷகிரா, இங்கிலாந்து துவா லிபா ,  மற்றும் பாலிவு நடிகை ஃப்பதேஹி ஆகிய நட்சத்திர பாடகர்கள் இதில் பாடல்கள் பாடுகின்றனர்.

இது, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கு ஷகிரா ஆன் தம் பாடலை உருவாகியது குறிப்பிடத்தக்கது.