1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Trichy siva son surya made a fight in bar

நட்சத்திர விடுதியில் நண்பருடன் பீர் கொண்டாட்டம் – திருச்சி சிவா மகன் மேல் புகார்!

திருச்சி
திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவா மகன் சூர்யா நண்பர்களுடன் சேர்ந்து நட்சத்திர விடுதியில் தகராறு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா. இவர் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இவரின் மகன் சூர்யா மேல் இப்போது ஒரு புகார் எழுந்துள்ளது. நட்சத்திர விடுதியில் தனது நண்பர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாட சென்றுள்ளார் சூர்யா. அப்போது அங்கு வந்த நண்பர் ஸ்ரீராம் என்பவர் 4 பியர்களுக்கு காசுக் கொடுக்க தனது ஏடிஎம் கார்டைக் கொடுத்துள்ளார். ஆனால் அதில் பணம் வரவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் சூர்யா மற்றும் நண்பர்கள் சேர்ந்து ஸ்ரீராமைக் கேலி செய்ய அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஸ்ரீராம் 100 க்கு அழைத்து சூர்யா உள்ளிட்டவர்கள் தன்னை தாக்க வருவதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து தேனாம்பேட்டை  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
அமெரிக்க பாடப்புத்தகதில் இந்திய நபர்; காடு வளர்த்த தனிமரம்!