செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (09:25 IST)

சாலையைக் குத்தி பார்த்து சோதனை செய்த மாவட்ட ஆட்சியர்!

திருச்சி அருகே மாவட்ட ஆட்சியர் சிவராசு புதிதாக போடப்படும் சாலையை சோதனையிட்டார்.

திருச்சி அருகே காரைப்பட்டி முதல் வேலக்குறிச்சி வரை 44 லட்ச ரூபாய் மதிப்பில் 2 கிலோ மீட்டர் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கு வேறு சில நலத்திட்டங்களை மேற்பார்வை இடுவதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வருகைதந்தார். அப்போது அவர் புதிதாக போடப்படும் சாலை தரமானதாக உள்ளதா நோண்டிப்பார்த்து சோதனை செய்தார்.