வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (18:07 IST)

’தளபதி 69’ படத்தில் ‘பிரேமலு’ நடிகை தான் ஹீரோயினா? விரைவில் அறிவிப்பு..!

தளபதி 69 திரைப்படத்தில் ‘பிரேமலு’ படத்தில் நடித்த மமிதா பாஜு நாயகி என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இந்த படத்திற்காக விஜய் போட்டோஷூட் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இன்று இந்த படத்தின் நாயகியாக மமிதா பாஜு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ’பிரேமலு’ மலையாள படத்தில் நாயகி ஆக நடித்தவர் என்பதும் அதேபோல் ஜிவி பிரகாஷ் நடித்த ’ரிபெல்’ என்ற படத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

23 வயதான மமிதா பாஜு, தளபதி 69 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேற ஒரு கேரக்டரில் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva