புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:00 IST)

விஜய்யின் கோட் படத்தோடு மோதுகிறாரா விஷால்… 10 ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆகும் படத்தில் எடுக்கும் ரிஸ்க்!

நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி 8 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருக்கும் மத கஜ ராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படம் மத கஜ ராஜா. 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் முடிந்தாலும், படத்தை தயாரித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டின் கடன்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது. விஷாலும் போராடிப் பார்த்து ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் அந்த படத்தை கைவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. தங்களுக்கு இருந்த சில கடன் பிரச்சனைகளை இப்போது தீர்த்துள்ளதாகவும், அதனால் முதல் கட்டமாக ‘மத கஜ ராஜா’ படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி விஜய்யின் கோட் படத்தோடு ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.