வியாழன், 3 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (08:05 IST)

அந்த ஒரு நிமிடக் காட்சி நீக்கப்படுகிறது… இயக்குனர் விஜய் மில்டன் கொடுத்த அப்டேட்!

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக உருவாக்கத்தில் இருந்த இந்த படம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் வெளியான அன்று இயக்குனர் விஜய் மில்டன் வெளியிட்ட ஒரு வீடியோ சர்ச்சைகளைக் கிளப்பியது.

அந்த வீடியோவில் “இந்த படத்தின் நாயகன் சென்னைக்கு வரும்போது அவன் யார் என்று தெரியாது, அவனது பின்னணி என்ன, எதற்காக சென்னைக்கு வருகிறான், அவனுடன் இருப்பவர்கள் யார் யார், அவருடைய முகத்தில் உள்ள காயத்துக்கு என்ன காரணம் என்பது எதுவுமே தெரியாமல் கேள்வியாக இந்த படத்தை இடைவேளை வரை நகர்த்திருப்பேன். ஆனால் அவன் யார் என்பதை சொல்லும் ஒரு நிமிடக் காட்சியை படத்தின் தொடக்கத்தில் சேர்த்து விட்டார்கள். இதனால் கதாநாயகன் யார் என்ற மர்மம் உடைந்துவிடுகிறது. அதனால் அந்த ஒரு நிமிடக் காட்சியை மறந்துவிட்டு படம் பாருங்கள்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ள அவர் “படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து ஷோக்கள் அதிகமாகியுள்ளன. நாங்கள் எதையெல்லாம் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று எதிர்பார்த்தோமோ அது நடந்துள்ளது. அந்த ஒரு நிமிடக் காட்சி இப்போது நீக்கப்பட்டுள்ளது. இதில் உதவியாக இருந்த சரத்குமார் சாருக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.