திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2019 (08:54 IST)

இவினிங் சூட் ஒகே... வெயில்ல நடிக்க முடியாது; பிகு பண்ணும் நடிகைகள்!

வெயிலை காரணம் காட்டி சில நடிகைகள் பகல் நேரங்களில் நடிகக் முடியாது என கூறி கறார் காட்டுவது தயாரிப்பு தரப்பிற்கும், படக்குழுவிற்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
மலையாள நடிகர் மம்முட்டி தற்போது ‘மாமன்கம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சரித்திரப்படமாக உருவாகி வருகிறது. கேரளாவில் பிரபலமான பண்டைய கலாசார விழாவான மாமன்கம் பெயரில் இந்த படம் உருவாகி வருகிறது. 
 
இந்த படத்தில் நாயகிகளாக பிராச்சி தேசாய், மாளவிகா மேனன் ஆகிய இருவரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் அதிரபள்ளியில் நடந்து வருகிறது. இந்த முறை கேரளாவில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. 
 
இதனால், படத்தின் நாயகிகள் பகலில் நடிக்க முடியாது என கூறிவிட்டனராம். எனவே, வேறு வழியின்றி படப்பிடிப்பு நேரம் மாலை 4 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.