யாத்ரா: தமிழக அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்றுத்தரும் மம்முட்டி!

Last Modified வெள்ளி, 21 டிசம்பர் 2018 (18:04 IST)
ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆரின் வாழ்க்கை வரலாற்று படமாக தயாராகியுள்ள ‘யாத்ரா’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 


 
வாழ்க்கை வரலாற்றுப் படங்களின் வரிசையில் மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு டோலிவுட்டியில் படமாக இயக்கப்பட்டு வருகிறது. 
 
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி நடிக்கும் இந்தப் படத்திற்கு 'யாத்ரா’ எனப் பெயரிடப் பட்டுள்ளது. இதனை இயக்குநர் மகி.வி.ராகவ் என்பவர் இயக்குகிறார். தவிர, ராவ் ரமேஷ், ஜெகபதி பாபு, சுஹாசினி, போசனி கிருஷ்ண முரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 
 
'யாத்ரா' படத்தை ‘70எம்எம் எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. கே இசையமைத்து வரும் இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 
இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.  

இந்த டீசரில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அரசியில் வாழ்க்கை தமிழக அரசியல்வாதிகளுக்கு ஓர் தகுந்த பாடத்தை புகுட்டும் விதத்தில் அமைந்துள்ளது. 
இதில் மேலும் படிக்கவும் :